.

------------------------------------------------------
<விறகில் தீ இருப்பதை உணர்ந்தவன் ஞானி. அதில் தீ மூட்டி உணவு சமைத்து சாப்பிட்டவன் விஞ்ஞானி. >>>>> உன் மனம் உலகத்திலேயே உழன்று கொண்டிருக்கும்போது, எல்லாம் ஈஸ்வரனே என்று வாயால் மாத்திரம் சொல்லிக்கொண்டிருந்தால் உனக்கு யாதொரு நன்மையும் ஏற்படாது. >>>>>> வஞ்சனையால் பெரும்பணி எதையும் சாதித்து விட முடியாது. அன்பாலும் உண்மையான ஆற்றலாலும் தான் அரும் பெரும் சாதனைகள் நிறைவேறுகின்றன. >>>>>>>நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று தன்னம்பிக்கையுடன் இருங்கள், அவ்வாறு நீங்கள் உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும். >>>>>>அன்பிருக்கிறதா உங்களிடம்? உங்களால் ஆகாத காரியம் ஒன்றுமே இல்லை. >>>>>>>இன்னும் செய்யவேண்டிய வேலைகளையெல்லாம் செய்ய ஆற்றல் பெற வேண்டுமா? முதலில் பொறாமையை ஒழியுங்கள்.>>>>>>துடுப்பைப் போடுங்கள், அதனால் ஏற்பட்டக் களைப்பிற்கு ஓய்வெடுங்கள். போட்ட துடுப்பினால் விளைந்த வேகம் படகைக் கரை சேர்த்துவிடும்.>>>>>>>>என்னால் இந்தச் செயலை செய்து முடிக்க முடியும் என்றே நீங்கள் எப்போதும் நினைக்க வேண்டும். இந்தச் செயலை என்னால் முடியாது என்ற எண்ணமே உங்கள் உள்ளத்தில் எழக்கூடாது.>>>>>>>எதையும் பரபரப்புடன் இயற்றுதல் கூடாது. தூய்மை, பொறுமை, விடா முயற்சி இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்.>>>>>>>>எவனது நெஞ்சு ஏழைகளுக்காக துயரில் ஆழ்ந்திருக்குமோ அவனையே மகாத்மா என்பேன், அப்படி இல்லாதவன் துராத்மாவே.
`

Saturday, July 5, 2014

சுவாமி விவேகானந்தர்


Swami Vivekanandar


சுவாமி விவேகானந்தர் அவர்கள்இ வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்குபவர். அவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் 'ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்' மற்றும் ஸ்ரீ 'ராமகிருஷ்ணா மிஷன்' போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். சுவாமி விவேகானந்தர் அவர்கள்இ ஏழை

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்


ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள்இ 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். 'கடவுள் ஒருவரேஇ வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல வழிகள்' என்பதை தெளிவுபடுத்திஇ இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியாய் திகழ்ந்தவர். இந்தியாவின் ஆன்மீகப் பேரொளியைஇ அமெரிக்காஇ ஐரோப்பா எனப் பிறநாடுகளுக்கும் கொண்டுசென்றுஇ வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பிய சுவாமி விவேகானந்தரை இவ்வுலகிற்குத் தந்தவர்.